ஆளுநர் ஆர்.என். ரவி தனது நிர்வாக வரம்புகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களைச் சொல்லி வருகிறார் என முரசொலி விமர்சித்துள்ளது.
திமுக நாளேடான முரசொலி வெளியிட்ட கட்டுரையில், “தெலங்கானாவில் தமிழிசைக்கும் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் பிரச்னை இருக்கலாம். அதனால் அங்கு அவருக்கு இருக்க முடியாமல் போகலாம். புதுவையை தனது தகுதிக்கு சிறிய மாநிலமாக நினைக்கலாம். அதனால் அங்கும் இருக்கப் பிடிக்காமல் இருக்கலாம். அவை பிடிக்கவில்லை என்றால் பதவி விலகி விட்டு தமிழ்நாட்டுக்கு வந்து அரசியல் நடத்தலாம்” என்று கூறியுள்ளார்.
அதை விட்டு விட்டு வேற்று மாநில ஆளுநராக இருந்து கொண்டு இங்கு அரசியல் நடத்தக் கூடாது. இது அவர் வகிக்கும் பதவிக்குரிய பணிகள் அல்ல என்றும், அதாவது தெலங்கானா, புதுவை மாநிலத்தின் சுருக்கெழுத்தாளர், இங்கு வந்து தலையை நுழைப்பேன் என்பது ஏற்ற பொறுப்புக்கே ஏற்றது அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், “தமிழக ஆளுநராக இருக்கும் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்கள் தனது நிர்வாக வரம்புகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களைச் சொல்லி வருகிறார். இதற்கு திமுகவும் முரசொலியும் வலுவான விளக்கத்தைச் சொல்லி வருகிறது. இதற்குள் எதற்காக தமிழிசை தலையை நுழைக்க வேண்டும்? தமிழக ஆளுநருக்கும் இவர் shorthand expression ஆக நினைக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.







