முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவ பாஜக நிர்வாகிகள் களத்தில் இறங்க வேண்டும் -அண்ணாமலை வேண்டுகோள்

மழை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவிட பாஜக கட்சியின் நிர்வாகிகள் களத்தில் இறங்க வேண்டும் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜகவினருக்கு அண்ணாமலையின் வேண்டுகோள்:  ‘வடகிழக்கு பருவ மழை தமிழகமெங்கும் மிகப்பெரிய அளவில் பெய்து வருகிறது. அவ்வப்போது புயல் உருவாகும் காரணத்தினால் மழை தீவிரமடைந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட மழை பெய்யும் அளவு அதிகரித்து இருக்கும் காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் பல்வேறு பகுதிகளில் திறந்து விடப்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் உள்பட டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நெல் மற்றும் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. சென்னை மற்றும் பல்வேறு நகர்ப்புற பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்களின் அன்றாட பணிகள் முடக்கப்பட்டுள்ளது. வீடுகள் நிறைந்த பகுதிகளும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஆங்காங்கே புதிய கால்வாய்கள் அமைக்கும் பணிகள் முடிவடையாமல் நிற்பதால் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நீர் பள்ளங்களாக மாறி உள்ளன எனவும் தெரிவித்தார்.

மேலும், மழை தொடரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய தருணம் இது. முதல்வர் நேரில் சென்று பார்வையிடுவது மட்டும் போதாது. அத்துனை அரசு எந்திரங்களும் முடுக்கி விடப்பட வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக போதுமான நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும். அதில் முதல் கட்ட நிவாரண தொகையை அவர்கள் வங்கி கணக்கில் தமிழக அரசு உடனடியாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதற்கு முன் வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும், கொரோனா பாதிப்புகளால் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்த காலங்களிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்காங்கே மோடி கிச்சன் அமைத்து உணவு, உடை, நிவாரண உதவி பொருட்கள், மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி மக்களுக்காக உழைத்தவர்கள் நாம் என குறிப்பிட்டார்.

கட்சியின் முக்கிய கொள்கையே சேவை செய்வதுதான். எனவே தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். ஆங்காங்கே மோடி கிச்சன் என்ற உணவு தயாரிக்கும் கூடங்களை உருவாக்கி பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்களுக்கு உணவுகள் வழங்க வேண்டும். எவர் ஒருவரும் பசியால் வாடக்கூடாது. அந்தந்த பகுதிக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு திட்டமிட வேண்டும். அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பணிகளை புயல் வேகத்தில் செய்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மருத்துவ பிரிவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்திட வேண்டும். மக்களின் நண்பர்களாக உறவினர்களாக இருந்து அவர்கள் கஷ்டத்தை போக்கும் வகையில் பணி செய்திட  பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பாஜகவினருக்கு அண்ணாமலையின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram