அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை தொடங்கி வைத்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதற்கட்டமாக 47 கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக 500க்கும் மேற்பட்ட கோயில்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.
திமுக அரசின் 100 சாதனைகளில் ஒன்றாக, அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் துவக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழில் அர்ச்சனை மேற்கொள்வதற்கான வழிகாட்டி புத்தகங்கள் விரைவில் அனைத்து கோயில்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.








