அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் மறைவுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுசூதனின் மறைவையொட்டி, அதிமுக சார்பில் வரும் 7-ம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுசூதனன் மறைந்த செய்தி கேட்டு ஆற்றொணா துயரமும் – மிகுந்த வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். அஞ்சா நெஞ்சன் என்று அழைக்கப்பட்ட மதுசூதனன், அதிமுகவுக்காக 48 முறை சிறை சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மதுசூதனின் மறைவையொட்டி, அதிமுக சார்பில் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதிமுக சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.








