மதுசூதனனின் மறைவு என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது என வருத்தம் தெரிவித்து வி.கே. சசிகலா ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதிமுக அவைத் தலைவரான மதுசூதனனுக்கு கடந்த ஜூலை மாதம் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை திடீரென மோசமானது, இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு வந்தார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர் உடல்நிலை நேற்று மீண்டும் கவலைக்கிடமானது. இந்நிலையில் அவர் இன்று காலமானார். அவர் மறைவுக்கு அதிமுக தலைவர்களும் பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுசூதனனின் மரைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ள சசிகலா, மதுசூதனனின் மறைவு, அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளாஎர். மேலும் சோதனையான கால கட்டங்களில் துணை நின்றவர் என்றும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிடம் மிகுந்த பாசம் கொண்டவர் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். முன்னதாக மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே சசிகலா மருத்துவமனைக்கே சென்று அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







