தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான ஆய்வக வகுப்புகளை மார்ச் 6ஆம் தேதிக்குள் முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதல் செமஸ்டருக்கான ஆய்வக வகுப்புகள் கடந்த 8ஆம் தேதி முதல் நேரடியாக நடைபெற்று வருகிறது. மாணவர்களை கல்லூரிகளுக்கு வரவழைத்து, ஆய்வக வகுப்புகளை கல்லூரி நிர்வாகங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அவர்களுக்கான வகுப்புகளை மார்ச் 6ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை மார்ச் 8 முதல் 13ஆம் தேதிக்குள்ளாக நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







