முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸுக்கான அரசாணை வெளியீடு!

9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி, தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஒன்பது மாதங்கலாக திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் ஊரடங்கில் படிபடியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் செயல்படுவதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது.

இதனிடையே மாணவர்கள் காலாண்டு வரையிலும் கல்வி தொலைகாட்சி வாயிலாகவும் இணையதளம் மூலமாகவும் கல்விப் பயின்று வந்தனர். கடந்த 25ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

ஊரடங்கால் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்து போட்டி!

எல்.ரேணுகாதேவி

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!

Halley karthi

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

Niruban Chakkaaravarthi