பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி – மு.க. ஸ்டாலின்

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை…

பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உரையாற்றிய மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சி முடியபோகிறது என்பதால் தான் தினமும் அபத்தமான நிகழ்ச்சிகளை தமிழக முதல்வர் அறங்கேற்றி வருவதாக தெரிவித்தார். தமிழக பட்ஜெட்டில் ஏராளமான கற்பனைகளை பழனிசாமியும் நிதி அமைச்சர் பன்னீர்செல்வமும் வெளியிட்டுள்ளதாக விமர்சனம் செய்தார்.

மேலும் அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனை 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் என்றும் அவர் தெரிவித்தார். பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ஜெயலலிதா என மோடி பேசியதை சுட்டிக்காட்டிய முக ஸ்டாலின், மோடியை பார்த்து மோடியா லேடியா என கேட்டவர் தான் ஜெயலலிதா என குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.