முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 35-வது லீக் போட்டி சார்ஜாவில் நடக்கிறது. இதில் புள்ளிபட்டியலில் 2 வது இடம் வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 10 புள்ளி களுடன் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டலாக விளையாடினார். இந்தப் போட்டியிலும் அவர் கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, தோனி என மிரட்டல் பேட்ஸ் மேன்கள் இருந்தாலும் கடந்தப் போட்டியில் அடுத்தடுத்த ஆட்டமிழந்து ஏமாற்றமளித் தனர். அம்பத்தி ராயுடு காயத்தில் இருந்து மீண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் இன்றைய போட்டியில் ஆடலாம். பந்துவீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹசில் வுட் சிறப்பாக செயல்படுகின்றனர். இன்றைய போட்டியிலும் அவர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம்.

பெங்களூரு அணியில் கேப்டன் விராத் கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் கடந்த போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. இந்தப் போட்டியில் அவர்கள் மிரட்டுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின் றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விராத் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வழக்கம் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக் காது. பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், ஜாமிசன், முகமது சிராஜ், ஹசரங்கா தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

சார்ஜா மைதானம், பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தை கொண்டது என்பதால் இன்று ரன் மழை பொழியும் என தெரிகிறது.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Gayathri Venkatesan

புதுச்சேரியில் வாக்குபதிவு நிறைவு!

Halley karthi

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை: சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

Gayathri Venkatesan