ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.
ராஜமுந்திரியில் இருந்து துனி என்னுமிடத்திற்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வாடகைக்கு ஓட்டுநர் ஒருவர் தனது சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார். பிஸ்கெட் பாக்கெட்டுகள் அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு கயிறு மூலம் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்து கட்டப்பட்டிருந்தது.
அந்த வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தப்போது எதிர்பாரதவிதமாக கயிறு அவிழ்ந்து பிஸ்கெட் பாக்கெட்டுகள் சாலையில் சிதறி விழுந்தன.அதனை பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் ஓட்டுநருக்கு தகவலளிக்காமல் வந்தவரை லாபம் எனக்கருதி அள்ளிச் சென்றனர்.
சிறிது நேரம் சென்ற பின்னரே நிலைமையை உணர்ந்த ஓட்டுநர் திரும்பி வந்துப் பார்த்தப் போது கார்களில் சென்றவர்கள் கூர மனமில்லாமல் இந்த ஐந்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டுகளை அள்ளிச் சென்றனர். இதனை பார்த்த ஓட்டுநர் என்ன சொல்வதென்றே தெரியாமல் மனம் வெம்பியப்படி சென்றார்.
வேந்தன்







