சமீபத்தில் வெளியான ‘ஜிந்தா பந்தா’ பாடலில் நடிகர் ஷாருக்கான் இளமை தோற்றத்தில் நடனமாடிய வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அது குறித்த சுவாரஸ்யமான ட்வீட் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பதான் வெற்றிப் படத்திற்கு பிறகு நடிகர் ஷாருக்கான் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜவான். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஜவானின் ‘ஜிந்தா பந்தா’ என்ற பாடல் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி அதிக படியான லைக்குகளையும், பார்வைகளையும் பெற்று SRK ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த பாடலில் ஷாருக்கானின் நடன அசைவுகள் மக்களை கிறங்க வைத்துள்ளதோடு, பலரும் தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் SRK போலவே நடனமாடி பகிர்ந்தும் வருகின்றனர். அந்த வகையில், சமூக ஊடகங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக் கூடிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்களும் ஷாருக்கின் நடன மெட்டுகளுக்கு ரசிகராகி தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமான ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் ‘ஜிந்தா பந்தா’ பாடலின் வீடியோவை பகிர்ந்திருந்த அவர், இந்த ஹீரோவுக்கு 57 வயதா? இவர் புவியீர்ப்பு விசைக்கு எதிராக அதற்கே சவால் விடுகிற வகையில் வயதை மாற்றியவராக தெரிகிறார். இவர் மற்றவர்களை விட பத்து மடங்கு சுறுசுறுப்பாக இருப்பது போல் எனக்கு தெரிகிறது என குறிப்பிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டிற்கு உடனடியாக பதிலளித்த ஷாருக்கான் “வாழ்க்கை மிகக் குறுகியது அல்ல, மிக வேகமானது சார். இந்த வேகத்தைப் பெற நான் முயற்சிக்கிறேன். மகிழ்ச்சி, துக்கம், நடனம், புள்ளிகளில் நடப்பது போன்ற உணர்வை உருவாக்குவது.. முடிந்தவரை பலரை மகிழ்விக்க முயற்சிப்பது போன்றவைகளை செய்ய நான் நினைக்கிறன். நீங்கள் மகிழ்ச்சியான தருணங்களை கனவு காண்கிறீர்களா?” என கேட்டிருந்தார் . தற்போது இந்த ட்விட்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதோடு, 1.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும்,14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









