உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலை – நாளை திறந்து வைக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!

உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை (ஜன.19) விஜயவாடாவில் திறந்து வைக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு  ஆந்திராவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. …

உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை (ஜன.19) விஜயவாடாவில் திறந்து வைக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு  ஆந்திராவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  விஜயவாடாவில் உள்ள சுவராஜ் மைதானத்தில் உலகில் உள்ள அம்பேத்கர் சிலைகளிலேயே மிக உயரமான 206 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலையின் உயரம் 125 அடியாக உள்ள நிலையில்,  அடி பீடம் 81 அடி உயரம்
கொண்டதாக கட்டப்பட்டு அதற்கு சமூக நீதிக்கான சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை திறந்து வைக்கிறார்.

https://twitter.com/ysjagan/status/1747623127566180689

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.