முதல் ஆளாக இபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

அதிமுவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் ஆளாக இபிஎஸ்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இபிஎஸ் தரப்பு சார்பில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

அதிமுவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் ஆளாக இபிஎஸ்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் தரப்பு சார்பில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/draramadoss/status/1546367309740392448

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.