ஓபிஎஸ் உடன் அன்புமணி சந்திப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பாமகவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார். பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பாமகவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.

பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

முன்னதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி.

இந்நிலையில், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.