பேட்டரியால் ஆன ஜீப் கண்டுபிடித்த மாணவருக்கு உதவும் ஆனந்த் மகேந்திரா

கீழடியில் பேட்டரியால் இயங்கும் ஜீப்பை கண்டுபிடித்த என்ஜினீயர் மாணவருக்கு ஆனந்த் மகேந்திரா நிறுவனம் உதவி செய்வதாக ட்வீட்டர் பதிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்தவர் அருணகிரி கவிதா தம்பதி. கூலித் தொழிலாளியான இவர்களின்…

கீழடியில் பேட்டரியால் இயங்கும் ஜீப்பை கண்டுபிடித்த என்ஜினீயர் மாணவருக்கு ஆனந்த் மகேந்திரா நிறுவனம் உதவி செய்வதாக ட்வீட்டர் பதிவு செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்தவர் அருணகிரி கவிதா தம்பதி. கூலித் தொழிலாளியான இவர்களின் மகன் கௌதம். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் இவருக்கு சிறுவயதிலிருந்தே ஜீப் மீது உள்ள பிரியம் காரணமாக கட்டிட வேலைக்கு போய் சேர்த்து வைத்த பணத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஜீப் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதற்கு அவரின் பெற்றோர்களும் உதவியதால் ஒரு எலக்ட்ரிக் ஜீப்பை வெற்றிகரமாக செய்ய தொடங்கினார்.

ஆனால் இவரை பார்த்து பலரும் கேலியும் கிண்டலும் செய்துள்ளனர். படித்துவிட்டு வேலைக்கு போகாமல் பழைய பொருளை என்னடா பண்ணிக்கிட்டு இருக்கண்னு பலரும் கேட்டுள்ளனர். இருப்பினும் விடா முயற்சி செய்து பேட்டரியை வைத்து ஜீப்பை கண்டுபிடித்தார். அதில், தற்போது லேட் ஆசிட் பேட்டரியை பயன்படுத்தி வருகிறார்.
இந்த ஜீப்பின் முக்கியத்துவம் என்னவென்றால் முன் பக்கம் இரண்டு சக்கரமும், பின்பக்கம் இரண்டு சக்கரமும் தனியாக கண்ட்ரோல் செய்யலாம் அதுமட்டுமில்லாமல் நான்கு சக்கரங்களையும் முன்னும் பின்னும் நகர்த்தி கொள்ளலாம். இதுவரை யாரும் இந்த மாதிரி ஜீப்பை கண்டுபிடிக்கவில்லை, இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை செல்லலாம்.

மேலும் லெட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக லித்தியம் ஆசிட் பேட்டரி பயன்படுத்தினாலும் இத்துடன் சக்தி வாய்ந்த மோட்டார் சேர்க்கும் போது நல்ல வேகமாக செல்லும் ஆனால் இதில் தற்போது குப்பை வண்டி மோட்டாரை பயன்படுத்தி செய்துள்ளார்.
இந்த இளைஞன் கண்டுபிடிப்பை நமது நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தோம். இதன் எதிரொலியாக பல்வேறு அங்கீகாரங்கள் கிடைத்தது பலரும் இந்த காரை தயார் செய்ய பணம் தருவதாக கூறினார்கள். மேலும் இந்த இளைஞர் தனது கண்டுபிடிப்பை டிவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டு ஆனந்த் மகேந்திரா டேக் செய்துள்ளார். அதை பார்த்த ஆனந்த் மகேந்திரா அதற்கு ரிப்ளை செய்துள்ளார் .அந்த செய்தியில் அமெரிக்கா போன்ற மிகப் பெரிய நாடுகள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முதன்மையாக விளங்குகிறது. தற்போது இந்த மாதிரி இளைஞர்கள் இருக்கும் பட்சத்தில் இந்தியாவும் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் மிகுந்த வளர்ச்சி அடையும் கண்டிப்பாக நம்புகிறேன். கண்டிப்பாக டெக்னாலஜியில் இந்தியா முன்னேறும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தமிழ்நாட்டின் நிர்வாக தலைவரான வேலு மகேந்திரா டேக் செய்து டிவிட் செய்து உள்ளார். இதன்மூலம் வேலு மகேந்திரா விரைவில் பொறியாளர் கௌதத்தை வந்து சந்திக்க இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.