சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்விக்கும், தட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சில நாட்களாகவே கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் கூடுதல் வரதட்சணை கேட்டு தமிழ்செல்வியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்செல்வி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வரதட்சணை கொடுமை காரணமாகவே தமிழ்செல்வி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே தமிழ்செல்வியின் கணவர் விக்னேஸ்வரனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







