மடாதிபதி நரேந்திர கிரி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவருடைய சீடர் ஆனந்த் கிரி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்ததால், சிறைச் சாலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற மடம் உள்ளது. இதன் மடாதி பதியான மஹந்த் நரேந்திர கிரி, சாதுக்களின் அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சடலத்தை மீட்ட போலீசார், அங்கிருந்த உயிரிழப்பு கடிதத்தை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் ‘என் உயிரிழப்புக்கு சீடர்கள் ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர்தான் காரணம். எனது போட்டோவை, ஒரு பெண்ணுடன் இருப்பது போல மார்பிங் செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்க, ஆனந்த் கிரி திட்டமிட்டிருப் பதாக தகவல் வந்தது. நான் மரியாதையுடன் வாழ்ந்தவன். அவப்பெயருடன் வாழ விரும்பாததால் கடந்த 13-ஆம் தேதியில் இருந்தே உயிரிழப்பு செய்ய முயற்சித்தேன்’ என நரேந்திர கிரி கூறி உள்ளார். இதையடுத்து ஆனந்த் கிரி உட்பட 3 சீடர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்த் கிரி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமனறத்தில் கூறியதை அடுத்து, நீதிபதி அவருக்கு சிறையில் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.








