ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியமைத்துள்ள தாகக் குற்றஞ்சாட்டினார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் முடக்கப் பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது என்றும் அதிமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக அரசின் நடவடிக்கையால் தான் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக் கை அதிகரித்துள்ளது என்றும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முடக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடை பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.