முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

மடாதிபதி தற்கொலை : சிபிஐ விசாரணைக்கு உ.பி.அரசு பரிந்துரை

மடாதிபதி மஹந்த் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற மடம் உள்ளது. இதன் மடாதி பதியான மஹந்த் நரேந்திர கிரி, சாதுக்களின் மிகப்பெரிய அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இரு தினங்களுக்கு முன் இறந்து கிடந்தார். அவர் சடலத்தை மீட்ட போலீசார், அங்கிருந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் ‘என் தற்கொலைக்கு சீடர்கள் ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர்தான் காரணம். எனது போட்டோவை, ஒரு பெண்ணுடன் இருப்பது போல மார்பிங் செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்க, ஆனந்த் கிரி திட்டமிட்டிருப் பதாக எனக்கு தகவல் வந்தது. நான் மரியாதையுடன் வாழ்ந்தவன். அவப்பெயருடன் வாழ விரும்பாததால் கடந்த 13-ஆம் தேதியில் இருந்தே தற்கொலை செய்ய முயற்சித்தேன். தைரியம் வரவில்லை’ என நரேந்திர கிரி கூறி உள்ளார்.

இதையடுத்து ஆனந்த் கிரி உட்பட 3 சீடர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை போலீசார் அமைத்துள்ளனர். இந்நிலையில் இந்த மரணம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள்!

Jeba Arul Robinson

காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!

Jeba Arul Robinson

பெங்களூரூவில் ஸ்தம்பித்துப்போன வாடகை கார் சேவை!

Halley karthi