பெண்ணின் தலையில் அமைச்சர் அடித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி

விருதுநகர் அருகே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மனுக்கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய விவகாரத்தில், சம்மந்தப்பட்ட பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் பயனாளிகளுக்கு கடந்த சனிக்கிழமை இலவச ஆடு…

விருதுநகர் அருகே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மனுக்கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய விவகாரத்தில், சம்மந்தப்பட்ட பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் பயனாளிகளுக்கு கடந்த சனிக்கிழமை இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம், தனது தாய்க்கு முதியோர் உதவித்தொகை கேட்டு கலாவதி என்ற பெண் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவை பெற்ற அமைச்சர், தான் கையில் வைத்திருந்த பேப்பர் கவர்களினால் அப்பெண்ணின் தலையில் தட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமைச்சர் பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

 

இந்நிலையில் அமைச்சர் தாக்கியதாக கூறப்பட்ட பெண் கலாவதி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுக்கு தெரிந்தவர் எனவும், விளையாட்டாகவும், செல்லமாகவும் தான் பேப்பரால் தமது தலையில் தட்டியதாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அமைச்சர் பெண்ணை தாக்கியதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, சம்மந்தப்பட்ட பெண்ணே இதுகுறித்து விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.