டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கிகள் பறிமுதல்

டெல்லி பன்னாட்டு விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட 45 துப்பாக்கிளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வெளிநாடுகளிலிருந்து கடத்தல் பொருட்கள் விமான நிலையங்களில் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு கடத்தப்படும் போது…

டெல்லி பன்னாட்டு விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட 45 துப்பாக்கிளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வெளிநாடுகளிலிருந்து கடத்தல் பொருட்கள் விமான நிலையங்களில் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு கடத்தப்படும் போது சுங்கத்துறை அதிகாரிகளால் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகளும் தற்போது அதிகமாக நடந்து வருகிறது. தங்கம், போதை பொருட்கள், ஆயுதங்கள், சிலை போன்றவை  கடத்தப்படும் போது சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் வழக்கமான நடவடிக்கைகயாக மாறியுள்ளது.

சென்னை, திருவனந்தபுரம், மதுரை போன்ற விமானநிலையங்களில் அடிக்கடி தங்கம் கடத்தப்படும் நிகழ்வும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அண்மை காலமாக அதிகமாக நடந்து வருகிறது.

https://twitter.com/ANI/status/1547159113305845761

இந்நிலையில், டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் ஆயுதப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி, தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது வியட்நாம் நாட்டிலிருந்து வருகை தந்த இந்திய தம்பதிகளின் நடவடிக்கையில் சந்தேம் ஏற்பட்டது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்கு பின் முரணனாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிகளின் உடைமைகளை சோதனையிட்டு பார்த்ததில், இரண்டு டிராலி பைகளில் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த தம்பதியினர் துப்பாக்கிகளை கடத்தி வந்ததை ஒப்பு கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானதா, இல்லையா? என்பதை பாலிஸ்டிக்ஸ் அறிக்கை உறுதிப்படுத்தும். முதற்கட்ட அறிக்கையில், துப்பாக்கிகள் செயல்பாட்டில் உள்ள பயன்படுத்த கூடிய நிலையில் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.