10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்!!

மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநரின் மகள், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநரான ‌ஜெயக்குமார். இவரது மகள் இலக்கியா மானாமதுரை…

மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநரின் மகள், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநரான ‌ஜெயக்குமார். இவரது மகள் இலக்கியா மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வெளியான நிலையில், மாணவி இலக்கியா 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியலில் 100 மற்றும் சமூக அறிவியலில் 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதையடுத்து, மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், மாணவி இலக்கியாவையும், அவரது பெற்றோரையும் அழைத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி இலக்கியா செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 493 மதிப்பெண்கள் பெற்றது பெருமையாக உள்ளது. நான் வருங்காலத்தில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அதை நோக்கியே எனது பயணம் இருக்கும்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இலக்கியாவின் தந்தை விஜயக்குமார், “நான் ஆட்டோ ஓட்டுனர். எனது மகளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். தற்போது எனது மகள் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எனக்கு
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த
ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.