நாகை அருகே கனரா வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்துக் கொள்ளை முயற்சி!

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம்-ஐ உடைத்துக் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகப்பட்டினம், வெளிப்பாளையத்தில் பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வெளிப்பகுதியில் ஏ.டி.எம்.…

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம்-ஐ
உடைத்துக் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம், வெளிப்பாளையத்தில் பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வெளிப்பகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. மேலும், உதவி மேலாளர் மகேஷ் வங்கிக்கு வந்தபோது, ஏ.டி.எம். மையம் திறந்து கிடப்பதையும், உள்ளே எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், மகேஷ் வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஏ.டி.எம். மையத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரை வைத்து உடைத்தது தெரியவந்தது.

மேலும், பணம் எடுக்க முடியாமல் கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றதும்
தெரியவந்தது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து
அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். பின்னர், மோப்பநாய் சம்பவ
இடத்திலிருந்து, தெற்கு நோக்கி சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. சிசிடிவி
காட்சிகள் தெளிவாக இல்லாததால் குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்க
முடியவில்லை.

இதுகுறித்து , வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.