திருவள்ளுர் அருகே கிணற்றைக் காணவில்லை என்ற திரைப்பட பாணியில் ஏழு குளங்களை காணவில்லை என கோரி இளைஞர் ஒருவர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பூதூர் கிராமத்தில் ஏழு குளங்களை காணவில்லை என கோரி இளைஞர் ஒருவர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் உள்ள ஏழு குளங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், ஆக்கிரமிப்பு குறித்து எச்சரிக்கை பலகை வைத்தும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை என கோரியும் இது குறித்து பல முறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் குளங்கள் காணவில்லை எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகையோடு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச் சம்பவம் குறித்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் இளைஞர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது தெரிவித்தார்.
—-கோ. சிவசங்கரன்







