இந்திய பொருளாதார பின்னடைவு குறித்த கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு!

இந்திய பொருளாதாரத்தின் பின்னடைவு குறித்த மேற்கத்திய நாடுகளின் எதிர்மறையான கருத்துக்கு மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் நடைபெற்ற கருத்தரங்கில்…

இந்திய பொருளாதாரத்தின் பின்னடைவு குறித்த மேற்கத்திய நாடுகளின் எதிர்மறையான கருத்துக்கு மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், இந்திய பொருளாதாரத்தின் பின்னடைவு மற்றும் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார்.

இந்திய பொருளாதாரத்தின் பின்னடைவு குறித்த எதிர்மறையான மேற்கத்திய கருத்துக்கு மறுப்பு தெரிவித்த அவர், அதற்கான பதிலை இந்தியாவிற்கு வரும் முதலீட்டாளர்களிடம் கேட்குமாறு சாடினார். மேலும், அறிக்கைகளை வெளியிடும் நபர்களின் கருத்துகளை கேட்பதைவிட இந்தியாவில் என்ன நடக்கிறது என்று நேரில் வந்து பாருங்கள் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : ஆளுநர் ஒப்புதல் எதிரொலி – அரசிதழில் வெளியானது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்…!

தொடர்ந்து பேசிய அவர், உலக வர்த்தக அமைப்பு (WTO) நியாயமானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினர் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், உலகளவில் அதிக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தொடர்ந்து அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.