முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சித்திக் கப்பன் ஜாமீனுக்கு சிரமப்பட்ட வழக்கறிஞர்கள் – உதவிய பத்திரிகையாளர்

சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (உபா சட்டம்) கீழ் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த ஜாமீன் வழங்குவதற்கு இரண்டு பேர் உதவியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் ஹத்ராஸில் பட்டியலின் பெண் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டார். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் சித்திக் கப்பனுக்கு தொடர்பிருப்பதாக கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (உபா) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்குமாறு சித்திக் கப்பன் மேல்முறையீடு செய்திருந்தார். உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவர் சட்ட விரோத பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையினர் மீண்டும் சித்திக்கை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கிலும் சித்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் இவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு நபர்கள் கிடைக்காமல் வழக்கறிஞர்கள் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து சித்திக் கப்பனின் வழக்கறிஞர் முகமது தனிஷ் கூறுகையில், ஜாமீன் கையெழுத்து போட நபர்கள் கிடைக்காமல் மிகவும் கஷ்டபட்டோம், அலிமுல்லா கான் என்ற சமூக போராளியும் குமார் சாவின் என்ற பத்திரிகையாளரும் இந்த  வழக்கில் ஜாமீன் கையெழுத்து போட்டனர். சித்திக்கின்  டெல்லி மீடியா நண்பர்கள் இவர்களை ஏற்பாடு செய்தார்கள்.  கேரளாவிலிருந்து வந்ததால் இங்கு பெரிதாக யாரையும் தெரியவில்லை. அதனால் ஜாமீன் கையெழுத்து போட யாரும் முன்வரவில்லை” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கையில் 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

Halley Karthik

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Gayathri Venkatesan

அமேசான் சிஇஓ பதவியிலிருந்து விலகினார் ஜெஃப் பெசோஸ்

Halley Karthik