சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மேற்கு வங்கம், அசாம், ஒடிசா மாநிலங்களில் கடந்த 2013ஆம் ஆண்டு சாரதா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பல ஆயிரம் கோடி மோசடி செய்தது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த நிதி நிறுவனத்தின் ரூ. 600 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில் சாரதா நிதி நிறுவனத்துக்கு சட்ட உதவி செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், முன்னாள் எம்எல்ஏ திபேந்திரா பிஸ்வாஸ், முன்னாள் அசாம் எம்எல்ஏ அஞ்சன் தத்தா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதை அமாலக்கத் துறை உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற விசாரணையையடுத்து இவர்களுக்குச் சொந்தமான ரூ. 3.30 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ. 3 கோடி மதிப்பிலான அசையாக சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.
-ம.பவித்ரா