முக்கியச் செய்திகள் தமிழகம்

தற்கொலைக்கு முயன்ற 8 மாத கர்ப்பிணி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 8 மாத கர்ப்பமான ஐடிஐ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவி கிண்டியில் உள்ள ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக எட்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். தான் கர்ப்பமடைந்ததை மறைக்க கடந்த டிச.13ம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் சம்பவ இடத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. மட்டுமல்லாது மாணவிக்கு கை கால்கள் முறிவும் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏறத்தாழ நான்கு நாட்கள் தொடர் தீவிர சிகிச்சையில் இருந்த மாணவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

8மாத கர்ப்பிணி மாணவி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நெல்லை விபத்து; மாணவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு

G SaravanaKumar

“காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது” – கர்நாடகா அமைச்சர்

Halley Karthik

கின்னஸ் சாதனை படைத்த பழம்பெரும் நடிகையின் மகள்

G SaravanaKumar