முக்கியச் செய்திகள் தமிழகம்

சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்

சாத்தான்குளம், தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, பென்னிக்ஸ்-சும், ஜெயராஜூம் உயிரிழந்த பின்னர், ஆவணங்களை திருத்தி இருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாட்சியம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ்-சும் கடந்த ஆண்டு ஜூன் மாதம், காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதால் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளரான ரவிச்சந்திரன் சாட்சியம் அளித்தார். அப்போது, ஜெயராஜூம், பென்னிக்ஸ்-சும் உயிரிழந்த பின்னர், ஆவணங்கள் திருத்தப்பட்டு, இருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சாட்சியம் அளித்தார்.

இது, தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கிருஷ்ணகிரியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்

Halley Karthik

உள்ளாட்சித் தேர்தல்; கணக்கை தொடங்கிய தளபதி

Halley Karthik

இந்தியாவில் புதிதாக 11,271 பேருக்கு கொரோனா

Halley Karthik