18 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நண்பனுக்கு லைவ் செய்த கொடூரம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலி என்ற பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு தன்னுடைய காதலன் மற்றும் காதலனின் நண்பனால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அப்போது, அந்த இளைஞர்கள் அதனைக் காணொளியாக எடுத்து வைத்து மிரட்டி வந்துள்ளனர்.
மேலும், கடந்த ஓராண்டாக அந்த இளம் பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உனது தந்தையையும், சகோதரரையும் கொன்று விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
• அண்மைச் செய்தி: ‘”எப்போதும்போல உங்களுடைய ஆதரவு வேண்டும்” – நடிகை நயன்தாரா’
இதனால், வெளியில் எதுவும் சொல்லாமல் அந்த பெண் அமைதியாக இருந்துள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஒருநாள் நண்பன் பாலியல் வன்கொடுமை செய்வதைத் தனது நண்பர்களுக்குக் கைப்பேசியில் ‘லைவ்’ ஆகக் காட்டி மகிழ்ந்துள்ளனர்.
இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு அவரின் பெற்றோர் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதை அறிந்துகொண்ட அந்த பெண்ணின் காதலன், பெற்றோர் ஏற்பாடு செய்த மாப்பிளை வீட்டாருக்கு அனுப்பியுள்ளார். இதை விஷயம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவந்ததும் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், காதலன் லாலு சாஹு, காதலனின் நண்பன் விவேக் யாதவ் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கிரிமினல் வழக்குகள் போடப்பட்டுள்ளது.
• சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







