“எப்போதும்போல உங்களுடைய ஆதரவு வேண்டும்”- நயன்தாரா

எப்போதும்போல உங்களுடைய ஆதரவு வேண்டும் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் கடந்த 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நடிகர்…

எப்போதும்போல உங்களுடைய ஆதரவு வேண்டும் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் கடந்த 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் – நயன்தாரா புதுமனத்தம்பதி திருப்பதி சென்று, வழிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று திருமண நிகழ்வுக்குப் பிறகு முதல் முறையாகச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நயன்தாரா தனக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை, இப்போது போல, எப்போதும் தொடர்ந்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அண்மைச் செய்தி: ‘“ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழலைக் கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் 10 ஆண்டுக் கால ஆட்சியின் ஊழல் குறித்துக் கேட்கவில்லை” – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்’

https://twitter.com/news7tamil/status/1535550271946108928

அதனைத்தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், நயன்தாராவை முதன் முதலில் இந்த விடுதியில் தான் சந்தித்துக் கதை சொன்னதாகவும், அதன் காரணத்தினாலேயே இந்த விடுதியில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.