நெமிலி அருகே கோயில் வாசலில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் ஐம்பொன் சிலை!

அரக்கோணத்தை அடுத்த நெமிலியை அடுத்த துர்க்கை அம்மன் கோயில் வாசலில் ஒன்றறை அடி ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் வழியாக சென்ற பொதுமக்கள்…

அரக்கோணத்தை அடுத்த நெமிலியை அடுத்த துர்க்கை அம்மன் கோயில் வாசலில் ஒன்றறை அடி ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் வழியாக சென்ற பொதுமக்கள் கோயில் வாசலில் ஒன்றறை அடி ஐம்பொன் சிலையை கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் ஊர் பொதுமக்கள் வருவாய்த் துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சிலையை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது ஊர் மக்கள் இரண்டு நபர்களின் மீது சாமி வந்து சிலை இங்கே தான் இருக்க வேண்டும் என கூறினர். அதனால் நாங்கள் தர மாட்டோடம் என மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் வருவாய் துறையினர், காவல் துறையினர் ஊர் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதில் மக்கள் சிலையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் சிலையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சிலையை யாராவது கடத்தி வந்து கோவில் அருகே வைத்து விட்டு சென்றனரா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.