புதுச்சேரியிலும் விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்! சட்டசபையில் அறிவிப்பு!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை  விதிக்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை  விதிக்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  புதுவையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின்பு அந்த நடைமுறை மாறியது.

 

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

பொதுமக்களை பாதிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழகத்தில் தீர்மானம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ளது. இதேபோல் சுற்றுலா நகரம் மற்றும் ஆன்மீக பூமியான புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா புதுச்சேரி சட்டப்பேரவையில் கவன தீர்மானம் கொண்டுவந்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டத்துறை ஒப்புதல் பெற்று, புதுச்சேரி மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என  சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பேரவையில் அறிவித்தார்.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்வதற்கு புதுச்சேரி பேரவையில் திமுக கொண்டுவந்துள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பாஜக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.