ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளதா? அமித்ஷா விளக்கம்!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அரசு அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கு…

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அரசு அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இதுவரை கொரோனா தொற்றை இந்தியா சரியான முறையில் கையாண்டிருப்பதாகவும் கொரோனா இரண்டாவது அலையையும் சிறப்பாக கையாள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் அமித் ஷா, அதன் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். வெளிநாடுகளில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளை விரைவாக அங்கீகரிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.