கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,73,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவுக்கு 19,29,329 பேர் தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாட்டில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 1,78,769 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







