அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் – காரணம் இதுதான்..?

அமெரிக்காவின் கலிஃபோர்னியாயில் உள்ள சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி வெள்ளிக்கிழமை அன்று மூடப்படுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள  கலிஃபோர்னியா-வை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் 85 சதவீதம் சரிவடைந்துள்ளது.…

அமெரிக்காவின் கலிஃபோர்னியாயில் உள்ள சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி வெள்ளிக்கிழமை அன்று மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள  கலிஃபோர்னியா-வை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் 85 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்த சரிவானது அமெரிக்க நாட்டின்  வங்கி துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சிலிக்கான் வேலி வங்கி மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதியுதவிகளை அளிக்கும் சேவைகளை செய்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று சிலிக்கான் வேலி வங்கியை இழுத்து  மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வங்கியின் மொத்த நிர்வாகத்தையும் அமெரிக்காவின் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் கைப்பற்றியது.

இதன் மூலம் சிலிகான் வங்கியின் வாடிக்கையாளர்களின் நெட்பேங்கிங் வசதியில்  கையிருப்பு  தொகை காட்டும் வசதி திடீரென நீக்கப்பட்டது. இதனால் அமெரிக்க  டெபாசிட் இன்சூரன்ஸ்  நிறுவனத்தின் கீழ் இவ்வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்கள் இன்சூரன்ஸ் தொகை பெற காத்திருக்கின்றனர்.

சிலிக்கான் வேலி வங்கியின்  சிறப்பு அம்சமே அந்த வங்கி  திவாலாவதற்கு  முக்கியமான காரணம் எனவும் சொல்லப்படுகிறது. முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள்  பல பிரிவில் முதலீடு செய்ய வேண்டும், ஓரே இடத்தில் மொத்த முதலீட்டையும் செய்தால் இதுதான் நடக்கும் என சிலிக்கான் வங்கியில் முதலீடு செய்தவர்களை நோக்கி பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இதனையும் படியுங்கள்: நூதன முறையில் மேலாளர்களை டிவிட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேற்றிய எலான் மஸ்க்

நமது நாட்டில் செயல்படும் ரிசர்வ் வங்கி போன்று அமெரிக்காவின் “அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி”  கடந்த ஒரு வருடமாக அந்நாட்டின் பணவீக்கக்தை குறைக்க தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதன் மூலம் அனைத்து துறைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டாலும் தொழில்நுட்ப துறையை நம்பியிருக்கும் நிறுவனங்கள்  குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டன.

வட்டி விகிதம் உயர்ந்ததால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முதலீடுகள் பெரிய அளவில் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து ஸ்டாட்ர்அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் டெப்பாசிட் செய்த தொகையை திரும்ப பெற்றனர். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வெளி சந்தையில் போதுமான முதலீடுகள் கிடைத்திருந்தால் கட்டாயம் சிலிக்கான் வேலி வங்கி  இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் சிலிக்கான் வேலி வங்கி   புதிய முதலீடுகளை திரட்ட  புதிய முயற்சிகளை மேற்கொண்டபோது பெடரல் ரிசர்வ் வங்கியின் தொடர் வட்டி விகித உயர்வால் அந்த முயற்சி தோல்வியை தழுவியது. தற்போது சிலிக்கான் வேலி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் தொகையை கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு திவாலாகியுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.