முக்கியச் செய்திகள் தமிழகம்

சாலையோர கடையில் மோதிய ஆம்புலன்ஸ்; டிரைவர் உயிரிழப்பு

அதிகாலையில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் சாலையோர கடையில் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் மற்றொரு கிளை மருத்துவமனை நாகர்கோவில் கோட்டார் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஆம்புலன்ஸ் இரண்டு மருத்துவமனைக்கும் தேவைக்கேற்ப கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஜெருஸ்லின் என்பவர் ஆம்புலன்ஸை இயக்கி வருகிறார். இன்று அதிகாலையில் ஆம்புலன்ஸ் நாகர்கோவிலில் இருந்து ஈத்தாமொழிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அதிகாலை என்பதால் சாலையில் வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் கோவில்விளை பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பேக்கரி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்து குறித்து அப்பகுதியினர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் தீயணைப்பு துறையினரும் தகவலறிந்து சம்பவ இடத்தில் விபத்துக்குள்ளான வாகனத்தையும், மோதிய வேகத்தில் உடல்நசுங்கி பலியான ஜெருஸ்சிலின் உடலையும் மீட்டனர். விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை- உயர்நீதிமன்றம்

G SaravanaKumar

ஒரு தேநீரின் விலை ரூ.1,000 என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

G SaravanaKumar

அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் ஆய்வு

G SaravanaKumar