”எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் ” – தவெக தலைவர் விஜய்…!

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி தவெக தலைவர் விஜய், அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

டாக்டர் அம்பேத்கரின் 69 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தவெக தலைவர் விஜய், சென்னை பனையூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர்  எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.