ரூ.45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 200 சவரன் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பாள்! பக்தர்களுக்கு கஜலட்சுமியாக அருள்பாளித்தார்!

ஆரணி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் நவராத்திரி தினத்தை ஒட்டி, ரூ. 45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளாலும், 200 சவரன் தங்க நகைகளாலும் அம்பாள் அலங்காரம் செய்யபட்டு  கெஜலட்சுமி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். திருவண்ணாமலை…

ஆரணி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் நவராத்திரி தினத்தை ஒட்டி, ரூ. 45 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளாலும், 200 சவரன் தங்க நகைகளாலும் அம்பாள் அலங்காரம் செய்யபட்டு  கெஜலட்சுமி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம்,  ஆரணி டவுன் கோட்டை வீதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலமான அருள்மிகு அறம்வளர் நாயகி, சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்தில் நவராத்திரி தின சிறப்பு நிகழ்ச்சியாக அம்பாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருளாசி வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நவராத்திரி தின ஆறாம் தினமான நேற்று இரவு,  அம்பாள் கஜலட்சுமி
அலங்காரத்தில் எழுந்தருளினார். ரூ.45 லட்சம்  மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளாலும், 200 சவரன் தங்க நகைகளாலும் கஜலட்சுமி ரூபத்தில் அம்பாள் காட்சியளித்தார். அப்போது கஜலட்சுமிக்கு சிறப்பு விசேஷ தீபாரதனைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.

ஏராளமான பக்தர்கள் ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க ஆபரணங்களால், அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி  அருள் ஆசி வழங்கி வந்த கஜலட்சுமி அம்பாளை வணங்கிச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.