”புகைப்படக் கண்காட்சியால் முதலமைச்சர் மீதுள்ள மதிப்பு 2 மடங்கு கூடுகிறது” – வைரமுத்து

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினை கவிஞர் வைரமுத்து பார்வையிட்டார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு “எங்கள் முதல்வர் எங்கள்…

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினை கவிஞர் வைரமுத்து பார்வையிட்டார்.

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கிற தலைப்பில் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இதனை கவிஞர் வைரமுத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பணி நெருக்கடியின் காரணமாக இக்கண்காட்சியினை பார்க்க முடியாதோ என்ற எண்ணத்தை உடைத்து கண்காட்சிகனை பார்ப்பதற்கான நல்வாய்ப்பை வழங்கிய அமைச்சர் சேகர்பாபுவுக்கு நன்றி. இப்புகைப்பட கண்காட்சி ஒளிகொண்டு எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு.

இதுவரை கடந்து வந்த அரசியல் பொது வாழ்க்கையை எழுத்தால் பதிவு செய்திருக்கும் ’உங்களில் ஒருவன்’ நூலினை ஒளி வடிவில் பார்ப்பதற்கு இப்புகைப்பட கண்காட்சி சரியாக இருக்கும். கடந்த காலத்துக்குள் சென்று நிகழ்காலத்துக்கு வந்ததாக இப்படக் கண்காட்சியினை பார்க்கும்போது எனக்கு தோன்றியது. கண்காட்சியில் உள்ள சிறைக்கூடத்தை பார்க்கும் பொழுது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். இம்முழு கண்காட்சியினை பார்த்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள மதிப்பு இரண்டு மடங்கு கூடுகிறது” என்று கூறினார்.

– ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.