நாகர்கோவில் மூதாட்டிக்கு வீடு ஒதுக்கீடு; முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த வேலம்மாள் பாட்டி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த, மூதாட்டி வேலம்மாளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் வீடு ஒதுக்கியுள்ளதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு மூதாட்டி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்ளும் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் படத்தில்,…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த, மூதாட்டி வேலம்மாளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் வீடு ஒதுக்கியுள்ளதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு மூதாட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதியைப் பெற்றுக் கொள்ளும் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் படத்தில், நாகர்கோவில் அடுத்த கலுங்குடி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வேலம்மாள் புன்னகை புகைப்படத்தின் மூலமாகப் பிரபலமானார், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழையின் சிரிப்பு எங்கள் ஆட்சியின் சிறப்பு என ட்வீட் செய்திருந்தார்.

அண்மைச் செய்தி: ‘போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது!’

மேலும், நாகர்கோவில் சென்ற போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூதாட்டியைச் சந்தித்து வீடு தருவதாக அறிவித்தார், அதன்படி, தற்போது மூதாட்டி வேலம்மாளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடு வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 76 ஆயிரம் மதிப்பிலான வீட்டுக்கான உரிமை கடிதத்தைக் கன்னியாகுமரி மாவட்ட கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் நேரடியாகச் சென்று வழங்கினார் அதனைப் பெற்றுக் கொண்ட மூதாட்டி கண்ணீருடன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மூதாட்டி, தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்படத்தில் புன்னகையுடன் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.