‘நீட்’ வினாத்தாள் கசிவு : குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் மசோதா இன்று தாக்கல்!

வி​னாத்​தாள் கசிவு தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்கும் மசோதா மக்​களவை​யில் இன்று தாக்​கல் செய்​யப்பட உள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழு​வதும் பல்​வேறு போராட்​டங்கள் நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நடைபெற்ற அமைச்​சர​வைக் கூட்​டத்​தில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

தற்​போது வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​கள், பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​களை தடுத்​தல்) சட்​டம் 2024-ன் கீழ் விசா​ரிக்​கப்​படு​கின்​றன. இதில் முக்​கிய திருத்​தங்​கள் செய்​யப்​பட்டு புதிய மசோதா வரையறுக்​கப்​பட்டு உள்​ளது. மக்​களவை​யில் இந்த மசோதாவை மத்​திய பணி​யாளர், பயிற்​சித் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங் இன்று தாக்​கல் செய்ய உள்​ளார். இதுகுறித்த குறிப்புகள் மக்களவை அலுவல் பட்டியலில் வெளியாகி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.