கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன – மாநில மகளிர் ஆணையம்

கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி திருநெல்வேலியில் அனைத்து துறை அலுவலர்களுடன்…

கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி திருநெல்வேலியில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆய்வுக் கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவர் குமரி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் திருநெல்வேலி மாவட்டம் முன்னோடியாக உள்ளது என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருவதாகவும் கூறினார். அதேபோன்று தாய் சேய் திட்டத்தை மாநிலத்தில் முன்னோடியாக திருநெல்வேலி மாவட்டம் செயல்படுத்தி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

 

குழந்தை திருமணங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, மானூர் இந்த தாலுகாக்களில் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் இந்த மாவட்டங்களில் அதிக அளவிலான குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது என்று தெரிவித்தார். குழந்தை திருமணங்களை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்ட வருவதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் 181 உதவி என் மூலம் அதிகமான புகார்கள் அளிப்பதாகவும் அந்த உதவி எண் குறித்து நல்ல விழிப்புணர்வும் பெண்களிடம் இருப்பதாக குறிப்பிட்டார். அதிகமான பெண்கள் பணிபுரியும் இடத்தில் புகார் கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், எல்லா இடங்களிலும் இந்த புகார் தொடர்பான குழுக்கள் இருந்தாலும் அந்தந்த நிறுவனங்களில் அவைகள் முறையாக செயல்படவில்லை என்று தெரிவித்தார்.

 

பெண்கள் துணிக்கடைகள், தொழிற்சாலைகளில் நீண்ட நேரம் நிற்பதை தடுப்பதுடன் அவர்களுக்கு குறைந்தபட்ச இடைவேளை கொடுப்பது தொடர்பான அரசாணை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்து இருப்பதாகவும், 1098 மூலமாக தங்களுக்கு திராண குற்றங்களை குழந்தைகள் புகாராக தெரிவிக்கின்றனர் அதற்கான விழிப்புணர்வு மாணவர்களிடம் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.