ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் வழங்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
விரைந்து வாக்குப்பதிவை நடத்தவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சின்னங்களை பிரபலப்படுத்த அரசு நிதியையோ, அரசு இயந்திரத்தையோ பயன்படுத்தினால், சின்னத்தை திரும்பப் பெறுவது, தேர்தலை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த வழக்கு,
விசாரணைக்கு உகந்ததல்ல, அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.







