யூடியூப்பர் மதன் மீது 100க்கும் மேற்பட்டோர் புகார்!

யூடியூபர் மதன் மீது 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். யூடியூப் சேனலில் சிறார்களிடம் ஆபாசமாக பேசி பல கோடி ரூபாய் சம்பாதித்த வழக்கில் யூடியூப்பர் மதன் கைது செய்யப்பட்டார்.…

யூடியூபர் மதன் மீது 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

யூடியூப் சேனலில் சிறார்களிடம் ஆபாசமாக பேசி பல கோடி ரூபாய் சம்பாதித்த வழக்கில் யூடியூப்பர் மதன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் நடத்திய மதன் பயன்படுத்திய லேப்டாப், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர். அதில் மதனின் ஃபாலோவர்கள் சிலரும் அவரால் பணம் சம்பாதித்தது தெரியவந்துள்ளது.

அவர்களில் சிலர் மாதம் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டியதும் தெரியவந்துள்ளது. எனவே ஃபாலோவர்கள் குறித்தும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மதனால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என முன்பே போலீசார் தெரிவித்திருந்தனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.