மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? தமாகா முக்கிய ஆலோசனை!

மக்களவைத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி என்பது குறித்து அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.  மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு…

மக்களவைத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி என்பது குறித்து அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.  அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்ராயன், உடையப்பன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடியல் சேகர்,  ராமன் ஆகியோர் முன்னிலையில் மாநில,  மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில்,  நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை கட்சியின் தலைவர் ஜிகே வாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள்,  மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.

மக்களவைத் தேர்தலில்,  யாருடன் கூட்டணி என்பது குறித்து கருத்து தெரிவிப்பதற்காக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு சீட்டு வழங்கப்பட்டது.  அதில்  அதிமுக + பாஜக வுடன் கூட்டணி அல்லது அதிமுகவுன் கூட்டணி அல்லது பாஜகவுடன் கூட்டணி என 3 வாய்ப்புகள் இடம் பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.