அரசியலில் குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டு தான் இருக்கும்- சி.பி.ராதாகிருஷ்ணன்

குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து ஜார்க்கண்ட்…

குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதிவியேற்க இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் பதவி கிடைத்தது, மகத்தான ஒரு மரியாதையாகவும், தமிழனத்திற்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன்.

தொடர்ந்து அரசியலில் உழைத்தாலும், நாம் நினைக்கிற திசையில் அரசியல் பயணம் இருப்பதில்லை. எந்த பொறுப்பு யாருக்கு எப்போது கிடைக்கிறதோ அதை சரியாக சமுதாயத்திற்காக பணியாற்ற வேண்டும் என்கிற வகையில் தான் எனது அரசியல் பயணம் இருந்து வந்திருக்கிறது என்று கூறினார்.


மோடியும், குடியரசுத் தலைவரும் தமிழின் மீது, தமிழ் கலச்சாரம், இலக்கியம்
மற்றும் பண்பாட்டின் மீதும் பெருமை கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் 3 தமிழர்கள் வெவ்வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்.

ஆளுநருக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள மோதல் போக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த சி.பி. ராதாகிருஷ்ணன், பொதுவாக குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும். அதை மனவலிமையோடு எதிர்கொண்டால் அவை காணாமல் போய்விடும் என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.