புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கொள்ளை அடித்த வடமாநிலத்தவர்களை, சிசிடிவி காட்சிகள் கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி-கடலூர் சாலை மணப்பட்டு கிராமம், எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில் மாஸ்க் அணிந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்துள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஏடிஎம்மில் கொள்ளை அடித்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், போலி ஏடிஎம் கார்டை கொண்டு, ஏடிஎம் சென்சாரை மறைத்து பணத்தை கொள்ளை அடித்ததுள்ளதும், முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.







