தேசத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் – பிரதமர் மோடி!

நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் பஸ்தரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் பாதுகாப்பு படையினரை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அப்போது ராணுவ உடையை அணிந்து வந்த மோடி, பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

இதையடுத்து அவர்களுடன் உரையாற்றிய மோடி, இன்று, நாடு முழுவதும் மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும், கோடிக்கணக்கான இந்தியர்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். மக்கள் தொலைதூரத்திலிருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் பயணிக்கிறார்கள். குடும்பத்தினரும் அன்புக்குரியவர்களும் ஒன்று கூடி கொண்டாடுவதற்கு இது ஒரு சிறந்த தருணம்.

தீபாவளியைக் கொண்டாட நானும் உங்கள் மத்தியில் வந்துள்ளேன். எல்லைகள் மற்றும் நாட்டுக்குள்ளே தேசத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் நீங்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள்.

உங்கள் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மைக்கு எங்கள் நன்றியைத் தெரிவிப்பதற்காக, 140 கோடி நாட்டு மக்கள் சார்பாக நான் இங்கு வந்துள்ளேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.