தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தபதிவில், “தீப ஒளி திருநாளாம் தீபாவளி, இருள் நீங்கி ஒளி பிறக்கும் நன்னாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் மலரும் திருநாளாகவும் அமையட்டும்!
இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிடவும், உள்ளங்கள் தோறும் நம்பிக்கையும் புத்துணர்வும் மலர்ந்திடவும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தமிழக மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




